திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடேசர் கீர்த்தனை
naṭēsar kīrttaṉai
வினா உத்தரம்
viṉā uttaram
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

108. இன்னந் தயவு வரவிலையா
iṉṉan tayavu varavilaiyā

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
    என்ன வர்மஞ் சொலையா.
  • கண்ணிகள்
  • 2. அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
    அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந்
  • 3. சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
    சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந்
  • 4. முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
    முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்
  • 5. தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
    தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந்
  • 6. பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
    பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்
  • 7. கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
    குருவே - குருவே - குருவேயென் றலறவும்
  • 8. இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
    என்ன வர்மஞ் சொலையா.

இன்னந் தயவு வரவிலையா // இன்னந் தயவு வரவிலையா